Header Ads

  • சற்று முன்

    மனைவிக்கு நகை வாங்க செயின் பறிப்பு - காவல்துறையிடம் வசமாக சிக்கிய புதுமாப்பிள்ளை..

     


    சென்னையில் மனைவியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு பணம் தேவைப்பட்டதால்,  செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை காவல் துறையிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.

    சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த  புவனேஸ்வரி( 26) என்பவர்,  கடந்த 7-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு  தனியாக வீடு திரும்பியிருக்கிறார்.  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை, மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார்.  பதறிப்போன புவனேஸ்வரி, அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்திருக்கிறார்.  சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர், உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்திருந்தது தெரியவந்தது. 



    இதன்மூலம் கொள்ளையனின் விவரங்களை சேகரித்த காவல் துறையினர். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த யோகேஷ் என்பவரை கைது செய்தனர்.  விசாரணையில் மனைவிக்கு நகை வாங்குவதற்காக , செயின் பறிப்பில் ஈடுபட்டதாக யோகேஷ் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  பகலில் அலுவலகத்திலும், இரவு நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையும் பார்த்து வரும்  யோகேஷுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

    அவரது  மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  அதற்கு தங்கம் வாங்க நினைத்த அவருக்கு  வேலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லை . நண்பர்களிடம் கடன் கேட்டும் கிடைக்காததால்,  தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் ஜெயின் பறிப்பில் ஈடுபட்டதாக யோகேஷ் தெரிருக்கிறார். 



    முதல் தடவையாக யோகேஷ் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும்,  சுமார் 50 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து யோகேஷை  பிடித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மனைவிக்கு தங்கம் வாங்க, புதுமாப்பிள்ளை செயின் பறிப்பில் ஈடுப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை ஆதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad