Header Ads

  • சற்று முன்

    முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்.

    முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்.

    இந்தியாவின் முப்படைகளுக்கும் முதன்மைத் தளபதியாக இருந்தவர் பிபின் ராவத் இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 14 பேர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்தியாவின் அடுத்த முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார் என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த அன்றைய தினமே பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவானே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


    முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்.


    அக்கூட்டத்தில் அடுத்த முப்படைகளின் புதிய தளபதியாக யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதில் இராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகளில் ஒருவர் முப்படைகளின் தளபதி ஆக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அதில் ராணுவ தளபதி நரவானே பெயர் முன்னிலையில் இருப்பதாகவும் அவரை அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


    முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்.


    இந்நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை  எம்.எம். நரவானே குழு தலைவராக செயல்படுவார் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad