Header Ads

  • சற்று முன்

    போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம் - உறவினர் சாலை மறியல்.

     

    போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் போலீசார் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்தார் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் வயது 21 கல்லூரி மாணவர்.  நேற்று மாலை பரமக்குடி கீழத்தூவல் காவல் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற மணிகண்டனை சோதனை செய்வதற்காக அவரை நிறுத்த முற்பட்டபோது அவர் நிற்காமல் சென்றார் என்று கூறப்படுகிறது.

     

    போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம்

     
    இதனால் போலீசார் மணிகண்டனை விரட்டி பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் போலீஸ் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என கூறிய நிலையில், அவர் பாம்பு கடித்து இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad