Header Ads

  • சற்று முன்

    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மகளா???

     

    நெல்லிக்காயின் நன்மைகள்

    நமது நாட்டில் அதிக அளவு விலையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படுவது நெல்லிக்காய். நெல்லிக்காய் நம் அனைவருக்கும் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு கனி. இதனை பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடக்கூடிய கனியாக இருக்கிறது. இக்கனியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி நெல்லிக் கனியில் அதிக அளவு உள்ளது.


    நெல்லிக்காயின் நன்மைகள்


    ஒரு நெல்லிக்கனி 3 ஆப்பிள் மற்றும் 20 ஆரஞ்சு பழங்களுக்கு சமமாம். அப்படிப்பட்ட நெல்லிக்கனி உண்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், முதுமை பருவத்தை தள்ளிப்போடும், உடலில் கேன்சர் ஏற்பட வாய்ப்பு குறைவு, ரத்த சோகையை குணப்படுத்தும், ரத்தத்தை சுத்தம் செய்து ரத்த அனுக்களின் அளவை அதிகரிக்கிறது. இதயத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை தடுக்கிறது.


    நெல்லிக்காயின் நன்மைகள்


    கண்களில் ஏற்படும் நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதாவது கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவப்பாதல், போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்றுப் புண், தொண்டை புண், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், முடி கொட்டுதல், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஒரு சிறப்பு மருந்தாக நெல்லிக்காய் இருக்கிறது நீங்கள் எப்போதும் இளமையாக துள்ளி குதிப்பதற்கும், எப்பொழுதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தினமும் ஒரு நெல்லிக்காய் அல்லது வாரத்திற்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது அவசியம்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad