Header Ads

  • சற்று முன்

    உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாய் ஃபாரின் நோட்டு - வெளிநாட்டுக்கு தப்ப முயன்றபோது கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்...

     

    பறிமுதல் செய்யப்பட்ட ஃபரின் கரன்சிகள்

     

    வெளிநாடுகளில் இருந்து தமிழத்திற்கு வரும் பயணிகள் விதவிதமான வகைகளில் நகைகளை  கடத்தி வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபடுவது வாடிக்கையான ஒன்றுதான்... ஆனால் தற்போது  தமிழகத்தில் இருந்து வெளிநாடுக்கு  செல்ல முயன்ற பயணிகள் கடைசி நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள்.

     நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட இருந்த தனியார் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில்  சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 7  பயணிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று  அதிகாரிகள் ஆடைகளில் சோதனையிட்டனர். 

    விமான நிலையம்


     அப்போது அவர்கள் உள்ளாடைகளில் ஃபரின் கரன்சிக்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் 7 பேரிடமிருந்தும் கட்டுக்கட்டாக சுமார் 42.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், சவுதி ரியால்கள் கைப்பற்றப்பட்டன.  தொடர்ந்து அவர்கள்  7 பேரையும்  அதிகாரிகள் கைது செய்தனர். 

    இதேபோல்,  அதிகாலை 5.30 மணிக்கு  ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் தூபாய்க்கு செல்ல இருந்த ஆண் பயணியை சோதனை செய்ததில்,  அவரது சூட்கேஸில் ரூ.14.45 மதிப்புடைய சவுதி ரியால் மறைத்து வைத்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருடைய பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கைது செய்தனர். இந்த இரு விமானங்களிலும்  வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 8 பயணிகளிடமிருந்து ரூ.56.63 லட்சம் மதிப்புடைய ஃபாரின் கரன்சிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad