Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை - மதுரை ஆட்சியர் உத்தரவு..

     


    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், அதன் தாக்கத்தைக் குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள்  தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 

    அந்தவகையில், தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர்  கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.  அதாவது ரேஷன் கடை, வணிக வளாகங்கள், கடை வீதி, வங்கிகள், தியேட்டர்கள் போன்ற 18 இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad