Header Ads

  • சற்று முன்

    யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்”..இறந்து பிறந்த குழந்தை’’.. கணவர் கைது.

    யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்

    வீட்டிலிருந்தபடியே  மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. பிரசவம் பார்த்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புளி புதுக்கோடைப் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் வயது ( 32 ) இவர் மரச்செக்கு மூலம் என்னை தயாரித்து வியாபரம் செய்து வருகிறார். இவர் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வமுடையவர் என்று கூறப்படுகிறது. இவர் கோமதி என்ற  பெண்ணை கடந்த 2 ஆண்டு  முன்பு திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் டிசம்பர் 13 தேதியன்று டெலிவரி ஆகுமென்று கூறப்பட்டிருந்த நிலையில் வலி வருவதாற்கான எந்தவித அறிகுறியும் ஏற்படவில்லை .

    யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்

    இந்நிலையில் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீடிரென வலி ஏற்பட்டுள்ளது . இதனை அடுத்து லோகநாதன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்  பார்க்க தனது அக்காவை உதவிக்கு அழைத்துக் கொண்டு . யூ டியூப் மூலம் வீடியோவை பார்த்து பிரசவம் செய்துள்ளார். ஒருவழியாக சிறமத்திற்கு பிறகு பிரசவம் ஆனது ஆனால் இதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

    இதையும் படிக்கவும்; உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாய் ஃபாரின் நோட்டு - வெளிநாட்டுக்கு தப்ப முயன்றபோது கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்...

    கோமதியின் ரத்தப்போக்கு அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் குழந்தை மற்றும் மனைவியுடன் அருகில் உள்ள புன்னை அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு கோமதிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது .

    யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்

    இந்நிலையில் புன்னை அரசு மருத்துவர் மோகன்குமார் நெமிலி போலீஸ் நிலையத்தில்  புகார் ஒன்றை கொடுத்தார் . அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து. யூ டியூப் மூலம் பிரசவம் பார்த்த லோகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad