Header Ads

  • சற்று முன்

    ’பொறுத்திருந்து பாருங்க.. ராஜேந்திர பாலாஜி மீது ...” - அமைச்சர் நாசர் சொன்ன சீக்ரெட்

    பொறுத்திருந்து பாருங்க.. ராஜேந்திர பாலாஜி மீது ...” - அமைச்சர் நாசர் சொன்ன சீக்ரெட்

    ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. முதல்வரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என பால்வளத்துறை  அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 3 கோடி வரையில் பணம் பெற்றுக்கொண்டு  மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


     

    புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதாவதைத் தவிர்க்க ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து  அவர் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின. 

    இதையும் படிக்க; நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா? - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குழப்பம்...

    முன் ஜாமீன் தள்ளுபடியானதால் இராஜேந்திர பாலாஜியை,  விருதுநகர்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 தனிப்படைகள்  அமைத்து  தேடிவந்தனர். அவர் பெங்களூருவில் உறவினர் வீட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்துல் மேல்முறையீடு செய்துள்ளார். 



    இதுஒருபுறம் இருக்க  ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியும் இத்தனை நாட்கள் வரை அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விளக்கமளித்திருக்கிறார். அவர் கூறியதாவது, மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்.. தற்போதைய ஆட்சியில் எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியினர் தவறு செய்தால் கூட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.” என்று தெரிவித்தார்..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad