Header Ads

  • சற்று முன்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் - ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனு

     


    அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலையொட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வேட்புமணு தாக்கல் செய்தனர்.

    அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்கள் நாளை (05.12.21) காலை 11.25 மணியளவில் பரிசீலனை செய்யப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் 08.12.2021 ( புதன்கிழமை) அன்று அறிவிக்கப்படும் .  இதனிடையே அரசியல் வட்டாரத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad