Header Ads

  • சற்று முன்

    பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் கைது..

     

    பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் கைது..

    விழுப்புரத்தில் அரசு பேருந்தில்  பயணம் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரத்தில் இருந்து நேற்று இரவு கொத்தமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணித்திருக்கிறார். இரவு நேரம் என்பதாலும், அதிக பயனிகள் இல்லாததாலும், இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நடத்துனர் சிலம்பரசன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.


    பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துனர் கைது..


    இதனையடுத்து அந்த மாணவி கானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓடும் பேருந்தில் நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad