Header Ads

  • சற்று முன்

    மகளின் தலையை துண்டாக வெட்டி செல்பி எடுத்துக் கொண்ட தாய் மற்றும் மகன்!!..

     

    மகளின் தலையை துண்டாக வெட்டி செல்பி எடுத்துக் கொண்ட தாய் மற்றும் சகோதரன்..

    மும்பை மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள வைஜாபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவருக்கு வயது 19 இவர் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கீர்த்தி கர்ப்பமானார். கர்ப்பமானதை அறிந்த அவரது தாய் சமீபத்தில் அவரது வீட்டுக்கு சென்றிருந்தார் தன் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக கீர்த்தி மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் நேற்று அவரது தாய் மற்றும் கீர்த்தியின் சகோதரன் ஆகிய இருவரும் அவரது வீட்டிற்கு வந்தனர்.

    இதனைக் கண்டு கீர்த்தி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுக்கு தேனீர் தயார் செய்வதற்காக சமையலறைக்குச் சென்றார். கீர்த்தியின் கணவர் உடல்நிலை சரியில்லாததால் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட இருவரும் சமையல் அறைக்கு சென்று அவரது சகோதரன் கீர்த்தியின் பின்பக்கமாக இருந்து தாக்கினார்.


    மகளின் தலையை துண்டாக வெட்டி செல்பி எடுத்துக் கொண்ட தாய் மற்றும் சகோதரன்..


    அவரது தாயார் இரு கால்களையும் பிடித்துக் கொண்டார். அவரது சகோதரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தியின் கழுத்தை துடி துடிக்க கொடூரமாக வெட்டினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவரையும் கொல்ல முயன்றதால் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார். பின்னர் கீர்த்தியின் தலையை துண்டாகி வெளியே எடுத்து வந்து இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்

    பின்னர் தாயும் மகனும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad