Header Ads

  • சற்று முன்

    அனைத்து சாதிக்கும் பொதுவான மயானத்தை உருவாக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

    சென்னை உயர்நீதிமன்றம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வருவதாக ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைப்பதற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    இதனை கேட்ட நீதிபதி மகாதேவன் இதுபோன்ற வழக்கு தொடர்வது வேதனை அளிப்பதாகவும். சாதி பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒற்றுமை இல்லாமல் ஆகிவிட்டது என்றும். தாழ்ந்த சாதியி னர்கள் இறந்தால் உயர்சாதியினரின் நிலங்களின் மீது எடுத்துச் செல்ல முடியாத நிலை இருக்கிறது என்றார். 

     

    சென்னை உயர்நீதி மன்றம்

    மேலும் இந்த வழக்கில் இருந்து அருந்ததியினருக்கு மயானம் இல்லை என்று கூறப்படுகிறது ஆனால் சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும். தமிழகத்தில் உள்ள மயானங்களில் சாதி பெயர் பலகைகளை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    எனவே ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான மயானத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதனை அனைத்து சாதியினரும் பயன்படுத்துவதற்கு உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    பொதுவான மயானத்தை வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அதன் மூலம் இதுபோன்ற மயானம் முறையை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரரின் மடூர் கிராமத்தில் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொது மயானத்தை அமைக்க உரிய இடத்தை அரசு அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்

     

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad