Header Ads

  • சற்று முன்

    ’அமைச்சர் காந்தி எடுத்த வாந்தி’, ’பாஜக வலையில் விழும் திமுக அமைச்சர்கள்’- பொங்கி எழுந்த அண்ணாமலை...

     

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை




    அவனெல்லாம் ஒரு தலைவனா? என ஒருமையில் பேசிய அமைச்சர் காந்திக்கு, நான் காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.

    செல்லுமிடமெல்லாம் திமுகவையும்,  திமுக அமைச்சர்களையும்  கடுமையாக விமர்சித்து அவர்களுக்கு பிபி ஏற்றிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.  திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அட்டாக் செய்து வரும் அண்ணாமலை,  அண்மையில் யூடியூபர் மாரிதாஸ்  கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். 

    அமைச்சர் காந்தி



    இதுகுறித்து ஓசூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அப்போது ஆவேசமான காந்தி, “ அவனெல்லாம் ஒரு தலைவனா?? அவனைப்பற்றியெல்லாம் கேட்கலாமா ?? வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறான்.. படித்தவனைப் போல் பேச வேண்டாமா?? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இப்படி பேசுகிறான்..” என்று ஒருமையில் பொறிந்து தள்ளினார்.  

    அமைச்சர் காந்தியின் இந்த பேச்சுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருக்கிறார்.  அரசியலில் இப்படி பேசுவது சகஜம் தான் என்று கூறிய அவர், ஆனால் காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு  இப்படி வாந்தி  எடுத்து வைத்திருக்கிறார் என்று சாடினார்.  இவர்கள் செய்யும் விமர்சனங்களால் நாங்கள் வளர்ந்து வருகிறோம்... பாஜக அடுத்த கட்டத்துக்கு போய்விட்டது என்றும் தெரிவித்தார். 

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை



    மேலும், திமுக அமைச்சர்கள் இப்படி நிதானம் இழந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்..  இதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்... எங்கள் வலையில் திமுக அமைச்சர்கள் விழ அரம்பித்து விட்டார்கள் என்று கூறினார். திமுக அமைச்சர்கள் ஒருமையில் பேசணும்.. அப்போது தான் எங்கள் கட்சி அடுத்த லெவலுக்கு போகும்.. எனவே காந்தி எடுத்த வாந்தியை வரவேற்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad