Header Ads

  • சற்று முன்

    பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவன்: திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை கொடுத்த போலீஸ்...

     



    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் விரும்பத்தகாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவி ஒருவர் ரயிலில் சாகசம் செய்தது. ஆவடியில் பேருந்து நிலையத்திலேயே மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டது என பல சம்பவங்கள்  தொடர்ந்து இதுபோன்று  அரங்கேறி வருகின்றன. 


    அந்த வரிசையில்  ஆவடியில் பள்ளி மாணவர் ஒருவர், அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்திருக்கிறார்.  ஆவடியிலிருந்து சிரஞ்சீவி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த S48 பேருந்தின் பின்பக்க கண்ணாடியை,  உடைத்திருக்கிறார்.  பின்னர் அந்த மாணவரை பட்டாபிராம் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 12 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவன், திட்டமிட்டு பேருந்து மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

     


    இதனையடுத்து மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் லாரன்ஸ் மாணவனை அழைத்து கண்டித்து அறிவுரை கூறியிருக்கிறார். அதோடு  மட்டுமின்றி 10 திருக்குறளை எழுத வைத்து நூதன தண்டனையும் கொடுத்திருக்கிறார். பின்னர் ஆத்திச்சூடி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி மாணவரை அனுப்பி வைத்தார்.  காவல் ஆய்வாளரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad