Header Ads

  • சற்று முன்

    ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி மருத்துவ சேவை ஆற்ற வேண்டும்... மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை.

     

    34-வது மருத்துவ பட்டமளிப்பு விழா

    ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் கடமையாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 34- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக  ஆளுநர் ஆர்என்.ரவி, முதலமைச்சர் முக. ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

    34-வது மருத்துவ பட்டமளிப்பு விழா


    இந்த
    34 வது பட்டமளிப்பு விழாவில் 12,814 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ள நிலையில் ஓமைக்ரான் பரவல் காரணமாக  இன்று 129 பேருக்கு மட்டும் நேரடியாக பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ கல்வி புரட்சியின் அடையாளமாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் விளங்குகிறது என அவர் கூறினார்.


    மருத்துவம் படிக்க வேண்டும் என்பது மாணவர்களின் கனவாக இருந்தாலும் அவர்கள் பட்டம் பெற்ற பின்பு நாட்டின் கனவாக மாறிவிடுகிறது என குறிப்பிட்டார். நாட்டிற்கு சேவை ஆற்ற மாபெரும் மனிதராக மாறியுள்ள மாணவர்களை இந்த நாடே வரவேற்கிறது என புகழாரம் சூட்டினார்.

    34-வது மருத்துவ பட்டமளிப்பு விழா


    தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நோய் அதன் காரணம் என்ன என்பதை நெஞ்சில் நிறுத்தி கடமையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் கிராமபுற மருத்துவ சேவை என்பது சவாலானதாக மாறியுள்ள இந்த நேரத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று மருத்து செவை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  
     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad