Header Ads

  • சற்று முன்

    இந்தியாவில் 6.04 கோடி பிரியாணி ஆர்டர்கள் - ஸ்விக்கி கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்...

     

    Chicken Biryani


    இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு  விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி ஒவ்வொரு ஆண்டும் தனது வருடாந்திர உணவு விற்பனை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அதன் படி  தற்போது  தனது 6 வது நிதியாண்டின் உணவு விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

    சிக்கன் பிரியாணி

    அதாவது, கடந்த ஆண்டு முழுவதும்  நாடு முழுவதும் உள்ள  மக்கள் எந்த உணவை அதிகம் விரும்பி சாப்பிட்டுள்ளனர், எந்தெந்த ஊர் மக்கள் என்னென்ன உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளது.  அதில் இந்தியாவில் அதிகளவு  ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் ’பிரியாணி’ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு  இந்தியா முழுவதில் இருந்து   சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்கள்  பெறுவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன்படி 2021 ஆம் ஆண்டு 6,04,44,000 பிரியாணி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சிக்கன் ப்ரைட் ரைஸ்


    அதனைத் தொடர்ந்து ஸ்னாக்ஸ் வகைகளில் சமோசா, பாவ் பாஜி போன்றவற்றை இந்தியர்கள் அதிகம் விரும்பியிருக்கிறார்கள். இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுன் , ரசமலாய் அகியவற்றை இந்தியர்கள் அதிகம் சாப்பிட்டிருகிறார்கள்..  இதில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தாவில்  சிக்கன் பிரியாணி என்றால், பெங்களூருவுக்கு மசால் தோசை, டெல்லி மற்றும்  கூர்கானில் தால் மக்காணி, மும்பையில் தால் கிச்சடி  போன்ற உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றனர். 

    குலாப் ஜாமுன்


    ஸ்விக்கி வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியலில் சென்னை மக்கள் சாப்பிடும் டாப் 5 உணவுகள் இடம்பெற்றுள்ளன.  முதலிடத்தில் சிக்கன் பிரியாணி, இரண்டாவது இடத்தில் சிக்கன் ப்ரைட் ரைஸ், அடுத்ததாக மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா  மற்றும் ஐந்தாவதாக நெய் பொங்கல் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

    நெய் பொங்கல்




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad