Header Ads

  • சற்று முன்

    ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழப்பு...

     

    பிபின் ராவத்

    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத்  மற்றும்  ராணுவ உயர் அதிகாரிகள் 12 பேர் உயர் ரக ராணுவ ஹெலிகாப்டரில்  வெலிங்க்டனுக்கு பயணம் மேற்கொண்டனர்.  அப்போது  குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 


     

    காலை  11:47 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதாக தெரிகிறது.  மதியம் 12 20 மணிக்கு தரையிறங்குவதற்கு 5 நிமிடங்களே  இருந்த நிலையில், இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு முன்னால் விபத்து நிகழ்ந்துள்ளது.


     

     வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசின் எஸ்டேட் பகுதியில் ஹெலிகாப்டர்  விழுந்து நொறுங்கியது. அதேநேரம் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு சுமார்  ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் தீ பற்றி எரிந்துள்ளது. தீயை அணைக்க வீரர்கள் நீண்ட நேரம் போராடினர். 


     இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 ராணுவ உயரதிகாரிகள்  தீயில் கருகி உயிரிழந்தனர்.  ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்களது உடல்கள் அடையாளம் கான முடியாத அளவிற்கு கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    யார் இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.??  

    முப்படை தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad