Header Ads

  • சற்று முன்

    அதிகரிக்கும் ஒமைக்ரான்.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?? - முதலமைச்சர் நாளை ஆலோசனை..

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஆனால் மறுபுறம் ஒமைக்ரான் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 2 வாரங்களில் வேறு எந்த பாதிப்பும் பதிவாகவில்லை... ஆனால் இன்று ஒரே நாளில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரித்துள்ளது. 

    முதல் தொற்று பதிவான நபருடன் தொடர்பில் இருந்த 57 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மேலும் மதுரையைச் சேர்ந்த 4 பேர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 பேர், சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில்  இன்று   முதல் தொற்று பாதிக்கப்பட்டவர் உள்பட 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    ஒமைக்ரான் வைரஸ்

     மீதமுள்ள 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுக்கு அறிகுறி இல்லாத ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்,  அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் ஒமைக்ரான் பரவலைக் குறைக்க, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து நாளை (24.12.2021) முதலமைச்சர் ஸ்டாலின்  அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்தக்கூட்டத்தில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad