Header Ads

  • சற்று முன்

    ’’மஞ்சப்பை அவமானம் அல்ல.. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் காவலர்களின் அடையாளம்.." - ஸ்டாலின் பேச்சு

    மஞ்சப்பை விழாவை தொடங்கி வைத்த ஸ்டாலின்

    பிளாஸ்டிக் பயை ஒழித்துக் கட்டும் வகையில் தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மஞ்சப்பை பயன்பாடு கௌரவ  குறைச்சல் அல்ல என்றும். அனைவரும் துணிப்பையை பயன்படுத்த முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    பிளாஸ்டிக் பயண்படுத்துவதால் ஏற்படும் தீங்கை நினைவில் கொண்டு தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு தடைவிதித்தது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மக்கள் தவிர்க்கவும். மீண்டும் அவர்கள் துனிபை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும். மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

    மஞ்சப்பை விழாவை தொடங்கி வைத்த ஸ்டாலின்


    சென்னை கலைவானர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புனர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டர்.இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் விளக்க படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர்  மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு உகுந்தது என்றும் மஞ்சப்பை வைதிருப்பதால் அவமானமல்ல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாவலர் என்றும் அவர் குறிப்பிட்டர்.

    மஞ்சப்பை விழாவை தொடங்கி வைத்த ஸ்டாலின்

    இதையும் படிக்க; 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... பெற்றோரின் கவனக்குறைவால் உயிரிழந்த சோகம்...

    அதுமட்டுமின்றி மஞ்சப்பை வைத்திருப்பதால் அவன் கிராமத்தான் என்று என்னும் எண்ணத்தை மாற்றவும் சினிமாவில் கூட மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அவர் கிராமத்தான் என்று அடையாளப்படுத்தும் மனநிலையை  மாற்ற வேண்டும் என்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad