Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு : மு.க.ஸ்டாலின் உத்தரவு..

     



    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க  உருமாறிய புதியவகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அண்டை மாநிலமான ஆந்திர, கர்நாடகாவில் கூட ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்த கொரோனா ஊரடங்கு, வருகிற 15-ந்தேதியுடன் முடிவடைகிறது.


    இதனையடுத்து  கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய முழு  ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,   டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும்,  சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும்,  அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


     
     

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad