Header Ads

  • சற்று முன்

    மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், ஓமைக்ரான் சிறப்பு வார்டு ஒதுக்கீடு

      

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும் எனவும், நெகடிவ் என ரிசல்ட் வந்தாலும் 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் பரிசோதனை செய்து, நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

    ராஜாஜி அரசு மருத்துவமனை, மதுரை

     

    கடுப்பாடுகள் தீவிடப்படுத்தப்பட்டுள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 150  சிறப்பு படுக்கைகள்  ஏற்படுத்தப்பட்டன. அதேபோல் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 15 சிறப்பு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் தற்போது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதி தீவிர சிகிச்சை பிரிவாக 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்க 16 பெர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad