Header Ads

  • சற்று முன்

    டெல்டாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் வைரஸ் - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..


     

    ஓமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவக் கூடியது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

     தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ஆம் தேதி உருமாறிய புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட 14 நாட்களில் 29 நாடுகளுக்கு பரவி விட்டது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படும் ஓமைக்ரான், தடுப்புசிகளுக்கு கட்டுப்படாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

    இந்நிலையில்  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

     


    இதுகுறித்து  மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஓமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கர்நாடகாவில் இருவருக்கு அந்த  தொற்று பாதிப்பு இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

     இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தாலே போதும் எனவும்கூட்டமாக செல்வதையும்கூட்டமான இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார் . 

    இதற்கு முன் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களை விட  ஓமைக்ரான் வீரியமிக்கது என்றும்உலகளவில் ஓமைக்ரான் வைரஸால்  373 பேர்  பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் லாவ் அகர்வால் கூறினார்

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad