Header Ads

  • சற்று முன்

    ஓமைக்ரான் பரவல்: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..

     


    ஓமைக்ரான் கொரோனா தொற்று உலகளவில்  29 நாடுகளுக்கு பரவியுள்ளது.  இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற கொரோனா வைரஸ்களைவிட ஓமைக்ரான் 5 மடங்கு வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    மேலும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழக பள்ளிகளில் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    • பள்ளிகளில் ஓமைக்ரான் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 
    • 1 முதல் 8ஆம் வகுப்பு  வரை சுழற்சி முறையில் மட்டுமே  வகுப்புகள் நடத்தப்பட  வேண்டும்.
    • பள்ளிகள், விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும்
    • இறைவணக்க கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
    • நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது
    • குறிப்பாக, ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த நவம்பர் மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. அதற்குள்ளாக மீண்டும் ஓமைக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad