Header Ads

  • சற்று முன்

    இறந்து கிடந்த தாய், தந்தை : தெறித்து ஓடிய மகன், மகள் - காவல்துறை தீவிர விசாரணை..

     



    சென்னை அடுத்து கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்- பாரதி கணவன் மனைவியான இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிந்தராஜும் பாரதியும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.ந்த தம்பதியினருக்கு தினேஷ் என்ற மகனும் பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாததால் இருவரும் என்ன ஆனார்கள் என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில் .சி.ஆரில் விடுதியில் தங்கியிருந்த இருவருர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரித்தபோது அந்த இருவரும் கொளத்தூரில் மாயமான தினேஷும் பாக்கியலட்சுமியும் என்பது தெரியவந்தது.

     

     

    இதனை அடுத்து போலீஸ் விசாரணையில் மக்கு தங்க மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தினேஷ் கூறியிருக்கிறார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் உறவினர் மற்றும் பலரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ஆறரை கோடி மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி என்பவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கைதான பாலாஜிக்கும் தினேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    தினேஷ் தனக்கு தெரிந்த நண்பர்கள்  மற்றும் உறவினர்களிடம் குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கி பாலாஜிக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் அதனை திருப்பி கேட்டு தன்னையும் குடும்பத்தினரையும் தொந்தரவு செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தனது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று தினேஷ் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

     இதையும் படிக்கவும் : தமிழகத்தில் ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு : மு.க.ஸ்டாலின் உத்தரவு...

     


     

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் தந்தை இருவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்ததாகவும் அதனை பார்த்து தானும் தன் சகோதரியும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி இ.சி.ஆருக்கு சென்று விஷமருந்தி கொண்டதாகவும் தினேஷ் போலீசாரிடம் கூறியிருக்கின்றார். இருப்பினும் தாய் தந்தை இருவரும் இறந்து சடலமாக கிடப்பதை பார்த்து போலீசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் தினேஷும் பாக்கியலட்சுமியும் வீட்டை விட்டு இ.சி.ஆருக்கு சென்றது ஏன் என்று போலீசார் தீவர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad