Header Ads

  • சற்று முன்

    சாலையில் கிடந்த பணம்.. - எடுத்துக்கொடுத்த மாணவிகளுக்கு குவியும் பாராட்டு..

     



    சென்னை பெரம்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பு படித்து வரும் மாணவிகள் பவித்ரா, சங்கரேஸ்வரி, வாணி.  இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து , வீனஸ் மார்க்கெட் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர்.

    அப்போது சாலையில் பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட மாணவிகள், நேற்று காலை மீண்டும் பள்ளிக்கு சென்றவுடன் அதனை ஆசிரியர் சந்திரபாபு, திருச்செல்வன் ஆகியோரிடம் நடந்த விவரங்களைக் கூறி ஒப்படைத்துள்ளனர். 


     

    இதனையடுத்து ஆசிரியர்கள், அந்த பணத்தை செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி இடம் கொடுத்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனர். சாலையில் கிடந்த ரூ. 10,000  பணத்தை நேர்மையுடன்  ஒப்படைத்த மாணவிகளை நேரில் அழைத்து இன்ஸ்பெக்டர் பாராட்டினார். மேலும் அவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் வழங்கினார். மாணவிகளின் இந்த செயல் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad