Header Ads

  • சற்று முன்

    என்னை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம் - கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு...

     

    SP Selvakumar


    கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சூப்பிரண்டாக சென்னை காவல் துறையில் ஏ.ஐ.ஜியாக பணியாற்றி வந்த செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஜியாவுக்ஹக் சென்னை சிபிசிஐடி  குற்றப்புலனாய்வு துறை சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய சூப்பிரண்டாக செல்வக்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட  போலீஸ் எஸ்பி செல்வக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் , கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை முழுமையாக ஒழிக்கப்படும் எனத்  தெரிவித்தார்.  கல்வராயன் மலைக்கு சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டு செல்வதை  முற்றிலும் தடுத்து, சாராயம்  காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றுத்தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிக்கவும்; ”கலைஞரின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் சண்முகநாதன்” - வைரமுத்து, கி.வீரமணி அஞ்சலி.!! 

    அதேபோல்,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க  கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் என்னை நேரில் சந்தித்து புகார்  கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad