Header Ads

  • சற்று முன்

    டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.. பாடத்திட்டம் , மாதிரி வினாத்தாள் வெளியீடு...

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்



    டிஎன்பிஎஸ்சி  திருத்தப்பட்ட  பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்   இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.  ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ் சி தேர்வுகள் நடத்தப்படவில்லை.  இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ் சி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக அரசு வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கும், தமிழ்  வழிக் கல்வி பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  

    வழக்கமாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ( General English) 100 கேள்விகளும்,  பொது  அறிவு, திறனறி வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், அறிவியல், சமுக அறிவியல் எல்லாம் சேர்ந்து 100 வினாக்களும் என 200 கேள்விகள்  இடம்பெறும்.  ஒரு கேள்விக்கு 1.50 மதிப்பெண் அடிப்படையில்  300 மதிப்பெண்கள் வழங்கப்படும்..

    இந்நிலையில்  தமிழக அரசு தமிழ் மொழித்தாள் கட்டாயம் என அறிவித்தது. மேலும் தமிழ் மொழித்தாளில்  குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் மீதமுள்ள 100 வினாக்களில் எடுக்கும் மதிப்புகள் கணக்கிடப்படாது என்று தெரிவித்து அரசாணையும் வெளியிட்டது.  இந்த அறிவிப்பு இதுவரை பொது ஆங்கிலம்  தாளுக்கு தயாராகி வந்தவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ  தேர்வுகளில் இடம்பெறும் முதன்மைத் தேர்வுகளின் திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள், குரூப் 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளின் தமிழ்மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

    பாடத்திட்டம் மற்றும் வினாத்தாளை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.  இங்கே கிளிக் செய்யவும்.. https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html









    No comments

    Post Top Ad

    Post Bottom Ad