Header Ads

  • சற்று முன்

    10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டுட்டோரியல் ஆசிரியர் கைது...

     


    சமீபகாலமாக ஆசிரியர்கள்,  மாணவிகளுக்கு எதிரான பாலியல் புகார்களில் சிக்குவது அதிகரித்தி வருகிறது.  அந்தவகையில் தற்போது  10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக, டுட்டோரியல் நடத்திவந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

     ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூரை அடுத்த மரவப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (30). ஈரோட்டில் டுட்டோரியல் நடத்திவரும் இருவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

    இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த 17 வயது மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, தன்னை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வைப்பதாகக்கூறி ஆசிரியர் லோகநாதன் தன்னை அனுகியதாகவும், கர்ப்பத்திற்கு அவர்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், லோகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad