Header Ads

  • சற்று முன்

    1 பையன் 2 பொண்ணு.. ’திருடா திருடி’ பட பாணியில் காதலனுக்காக நடுரோட்டில் கட்டி உருண்ட மாணவிகள்..

    Representative image

     

    ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில், பட்டப்பகலில்  12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள்  நடு ரோட்டில் முடியை இழுத்து போட்டு அடித்துகொண்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.   இரு வேறு பள்ளிகளில் படிக்கும் அந்த மாணவிகள் இருவரும்  ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளனர்.


    அதில் ஒரு மாணவி அந்த இளைஞருடன்  சாலையில் நடந்து சென்றுள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு மாணவி, உடனே ஓடிப்போய், அந்த இளைஞர் ”என்னுடைய காதலன் அவருடன் செல்ல நீ யார்” எனக் கேட்க..   பதிலுக்கு அந்த மாணவி  “அவன் என்னுடைய காதலன்  அவருடன் நான் எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.. அதை கேட்க நீ யார் ” என்று கேட்டுள்ளார்.  வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. 

    Read this also : அதிகரிக்கும் ஒமைக்ரான்.. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?? - முதலமைச்சர் நாளை ஆலோசனை.. 

    இதனையடுத்து அந்த இரு மாணவிகளும் சாலையென்றும் பார்க்காமல் தலை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு ஒருவரை  ஒருவர் அடித்துக்கொண்டனர்.. அதோடு அவதூறான வார்த்தைகளையும்  பயன்படுத்தி திட்டிக்கொண்டனர். இதனை அங்கு சுற்றியிருந்த மாணவர்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.. சில  மாணவ, மாணவிகள் அவர்களை தடுக்க முயன்றும்  இருவரும் கேட்டபாடில்லை.. தொடர்ந்து அடித்துக்கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தனர்.

    தகவலறிந்து காவல் துறையினரே நிகழ்விடத்திற்கு வரும் வரை மாணவிகளின் சண்டைக்காட்சி முடியவில்லை.. பின்னர் இருவரை சமாதானப்படுத்தி சண்டையை முடித்து வைத்த போலீஸார், பெற்றோரை வரவழைத்து மாணவிகளுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த இளைஞரை தனியாக காவல் நிலையம்  அழைத்துச்சென்று, இரு மாணவிகளையும் காதலித்து ஏமாற்றியது ஏன் என விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாணவிகள் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad