Header Ads

  • சற்று முன்

    ’’விழுப்புரத்தில் போலியான பெயரில் நகைக் கடன் பெற்று மோசடி’’ விசாரணையை தீவிரபடுத்திய போலீஸ்..

    விழுப்புரத்தில் நகை கடன் மோசடி


    வேறு ஒரு நபரின்  பெயரில் நகைக் கடன் பெற்று மோசடி செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    விழுப்புரம் மாவட்டம்  மேல் வாலை ஊராட்சியைச்  சேர்ந்த கலியபெருமாள் என்பவர். கண்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 10 கிராமிர் கான  நகை கடன் பெற்றுள்ளார். நேற்று  தமிழக அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடி குறித்து தன்னுடைய நகைக்கு  தள்ளுபடி கிடைத்துள்ளதா என்பதை தெறிந்து கொள்வதற்கு மத்திய கூட்டுறவு வங்கிற்கு சென்றுள்ளார்.

    வங்கியில் அவருடைய நகைக்கு தள்ளுபடி இல்லை என வங்கி செயலாளர் தெரிவித்துள்ளார்.  தனக்கு ஏன் தள்ளுபடி இல்லை என்று  வங்கி செயலாளரிடம் கேட்டபோது. உங்கள் பெயரில் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் பெற்று உள்ளதால் நகை கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.  

    விழுப்புரத்தில் நகை கடன் மோசடி

    இதையும் படியுங்கள் ; இன்றைய ( 06.01.2022 ) பெட்ரோல் டீசல் விலையின் நிலவரம்..

    இதனை கேட்டு  அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள் தாம் வேறு எந்த வங்கியிலும் நகை கடன் பெற வில்லை. எனது பெயரில் போலியாக நகைகடன் பெற்று உள்ளார்கள் என்றும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தனது பெயரில் மத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளர் மற்றும் வங்கியின் தலைவர் அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ் ஆகியோர் போலியான ஆவணங்களை தயார் செய்து நகை கடன் பெற்றுள்ளதாக புகார் செய்துள்ளார்.

    அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ்

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்  வங்கி செயலாளர் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியாக வேறு யார் பெயரிலாவது நகை கடன் பெறப்பட்டுள்ளதா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறானர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad