Header Ads

  • சற்று முன்

    அனுமன் ஜெயந்தி : 1,00,008 வடமாலையில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை...

    நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்



    நாமக்கல்லில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில், கை கூப்பி வணங்கியபடி ஸ்ரீ ஆஞ்சநேயர் காட்சியளிப்பார்.  ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் பிறந்தநாள்,  மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று  அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்

    அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து  எட்டு (1,00,008) வடையால் ஆன மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கென சுமார் 2 ஆயிரம் கிலோ உளுந்து மாவில் வடை தயாரிக்கப்பட்டது.  பின்னர் வடமாலை அலங்காரத்துடன் அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    இதையும் படியுங்கள்: கும்பம் ராசி நேயர்களே..2022-புத்தாண்டு பலன்கள்...  

    1,00,008 வடை தயாரிக்கும் பணி

     
    இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , சுற்றுலாத்துறை அமைச்சர்  டாக்டர் மதிவேந்தன், ராஜ்ஜிய சபா எம்.பி., ராஜேஷ்குமார், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்  உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி காலை முதலே திரளான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad