Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்..

     



    தமிழகத்தில் இன்று  ஒரே நாளில்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதுவரை  18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால்  நாடு முழுவதும் கொரோனா  மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதால்  15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு  அனுமதியளித்தது. அதன்படி இன்று முதல் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


    இதையும் படியுங்கள் ; தாயின் உடலை 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த மகள்கள்..   

    தமிழகத்தில் உள்ள 33 லட்சத்து 22 ஆயிரம் சிறார்களுக்கு  கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில்  26 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி  செலுத்தப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் 33 லட்சம் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.   இந்த திட்டத்தை இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.  

     


    இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.   இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும்  2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22 ஆயிரத்து 310 மாணவர்களுக்கும், குறைந்தபட்சமாக  ராணிப்பேட்டையில்  ஆயிரத்து 886 மாணவர்களுக்கும் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னை பொறுத்தவரை  4 ஆயிரத்து 601 சிறார்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.











    No comments

    Post Top Ad

    Post Bottom Ad