Header Ads

  • சற்று முன்

    விழுப்புரம் : செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு...

     


    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி திலகவதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது திலகவதியின் மகள்களான 8 வயதான  ஹேமவதியும், 10 வயதான கலையரசி மற்றும் திலகவதியின் உறவினரான ரவி என்பவரின் மகள் 10 வயதான சுபாஷினி மற்றும் சௌந்தர்யா ஆகிய நான்கு சிறுமிகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.


     

     பின்னர் இவர்கள் நான்கு பேரும் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குட்டை கிணற்றுக்குள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஹேமாவதி, கலையரசி, சுபாஷினி, ஆகியோர் கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர் நீச்சல் தெரியாத காரணத்தால் இவர்கள் மூவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.  குளிக்காமல் கிணற்றுக்கு மேலே இருந்த சௌந்தர்யா சத்தம் போடவே திலகவதி மற்றும் நெல் அறுவடை செய்த தொழிலாளர்கள் அனைவரும் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


     

    மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிகள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஹேமாவதி மூன்றாம் வகுப்பும், கலையரசி ஐந்தாம் வகுப்பு,, சுபாஷினி ஐந்தாம் வகுப்பு என  அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad