Header Ads

  • சற்று முன்

    6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி... ஆச்சரியத்துடன் பார்த்து வரும் கிராம மக்கள்..

      

    6 கால் கன்றுக்குட்டி

     

    பொதுவாக கால்நடைகள் என்றால் 4 நான்கு கால்களுடனே இருக்கும்.. ஆனால் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ஒருவரது வீட்டில் 6 கால்களை உடைய  கன்றுக்குட்டியை பசு ஒன்று ஈன்றுள்ளது. 

    புதுச்சேரி மாநிலம் வாதானூர்  பகுதியைச் சேர்ந்த  ஜெயப்பிரகாஷ் என்பவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்  தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.  அப்படி அவர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் கன்று ஒன்றை ஈன்றது. 

     

    6 கால் கன்றுக்குட்டி

    இதையும் படியுங்கள் ; நடிகை மீனாவுக்கு கொரோனா.. அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்...

    இந்த கன்று மற்ற கன்றுக்குட்டிகளைப் போல் இல்லாமல், 6 கால்களுடன் பிறந்திருக்கிறது.  அதன்  வயிற்றுப்பகுதியில்  கூடுதலாக இரண்டு கால்கள் உள்ளன. ஆனால் அந்த 2 கால்களும் பயன்படுத்த முடியாத வண்ணம் குட்டையாக உள்ளன. 6 கால்களுடன் பிறந்துள்ள இந்த கன்று  ஆரோக்கியத்துடன் இருப்பதாக  அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். 

     இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள்,  6 கால்களுடன் உள்ள  அதிசய கன்றுக்குட்டியைக் காண  ஜெயப்பிரகாஷின் வீட்டில் குவிந்து ஆச்சரியத்துடன்  வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad