Header Ads

  • சற்று முன்

    சென்னை விமான நிலையத்தில் ரூ. 60.71 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்...சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி..

    சென்னை விமானம் நிலையம்

    சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் இன்று காலை வந்தது.  அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.

    அப்போது ஒரு பெண் பயணி உட்பட 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்த 2 பயணிகளையும் சுங்கத்துறையினா் நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.


    இதையடுத்து பெண் பயணியை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். அந்த பெண் பயணியின் ஆடைகளுக்கள் தங்க செயின்கள் மற்றும் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். அதைப்போல் ஆண் பயணியை சோதனையிட்டதில், அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனா்.

       


    மேலும் படிக்க : ''திமுக ஆட்சியில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி''...அதிமுகவினர் பெருமைப்பட தேவையில்லை - மா.சுப்பிரமணியன்

    பெண் பயணி மற்றும் ஆண் பயணி ஆகிய இருவரிடமிருந்து மொத்தம் 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.60.71 லட்சம். இதையடுத்து பெண் பயணி உள்ளிட்ட 2 பயணிகளையும் சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை  நடத்துகின்றனா்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad