Header Ads

  • சற்று முன்

    மறுமணம் செய்து கொள்வதாக கூறி 86 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

    86 லட்சம் மோசடி செய்த நபர்

    சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவரின் மகள் ரேகா. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட சிவா என்பவர் மறுமணம் செய்து கொள்வதற்கு தனக்கு விருப்பம் இருப்பதாக கூறி மோகன்தாஸை நண்ப வைத்துள்ளார்.

    பணம் மோசடி செய்த நபர் கைது

    அவரிடமிருந்து சுமார் 86 லட்சம் ரூபாய் பணத்தையும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் பெற்றுள்ளார். பின்னர் மோகன்தாஸை சந்திக்காமல் தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த மோகந்தாஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிவாவை தேடிவந்தனர்.

    பணம் மோசடி செய்த நபர் கைது

    இதையும் படியுங்கள் ; சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பலி என்னிக்கை 4 ஆக உயர்வு.

    இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த சிவாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் சிவகணேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட பெயர்களில் பல்வேறு  மோசடிகளில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

    இதனையடுத்து சிவாவிடம் இருந்த காரை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார் சிவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad