Header Ads

  • சற்று முன்

    நடிகை மீனாவுக்கு கொரோனா.. அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்...

     

    Actress Meena


    கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து  மக்கள் அதிகம் பேசும், கேட்கும் வார்த்தை ’கொரோனா’வாகத்தான் இருக்க முடியும்...  அப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த வார்த்தையை கேட்டு சலிப்படைந்து விட்டார்கள்.. அதேநேரம், கொரோனா குறித்த அச்சம் இன்னும் நீங்கவில்லை.. 2 அலைகளாக புரட்டிப்போட்ட கொரோனா, தற்போது 3வது அலையாக மிரட்டி வருகிறது. போதாத குறைக்கு  ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு தன்பங்கிற்கு அச்சுறுத்தலைக் கொடுத்து வருகிறது..

    Actress Meena and Nainika


     இதையும் படியுங்கள் : தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு... சென்னையில் மட்டும் 2,481 பேருக்கு தொற்று...

    இந்த கொரோனாவின்  கோரப்பிடிக்கு திரைப்பிரபலங்களும் இரையாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,,,  அண்மையில் நடிகர்கள் கமல்ஹாசன், அர்ஜுன், வடிவேலு ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தனர். இன்று நடிகர் அருண் விஜய் கொரோனாவால் பாதிக்கபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்..  அதற்குள்ளாக நடிகை மீனா, அவருடைய கணவர் மற்றும் மகள் நைனிகா ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

    Actress Meena and Nainika

    இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ 2022ல் என் வீட்டிற்கு வந்த முதல் விருந்தாளி கொரோனா தான்.. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. கவனமாக இருங்கள்.. தயவு செய்து பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருங்கள்.. ” என்று தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் இந்த பதிவு அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad