Header Ads

  • சற்று முன்

    கும்பம் ராசி நேயர்களே..2022-புத்தாண்டு பலன்கள்...

    கும்பம் ராசி

    கும்பம் ராசி நேயர்கள்; நீங்கள் புற்றுள்ள அம்மன் கோயில் வழிபாடு காலஸ்திரி, திருப்பாம்பரம், திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் என்ற சொல்லக் கூடிய ராகு கேது தளத்துக்குச் செல்வது மிக மிக முக்கியம். சங்கரன்கோவில் என்று சொல்லக்கூடிய பிரசித்தி பெற்ற புற்றுள்ள அம்மன் கோயில்களுக்கு செல்வதெல்லாம் மிகப்பெரிய யோகம். 

    திருவேற்காடு, மாங்காடு அதேபோல் எங்கெல்லாம் புற்று அம்மன் கோவில் இருக்கிறதோ அந்த அம்மன் கோவில்களுக்கு படையெடுப்பது செல்வது கும்பராசி  நேயர்களுக்கு ஏற்றத்தையும் அனுகூலத்தையும் தரக் கூடியவை ஆகும். கும்ப ராசிக்காரர்களுக்கு  நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், தலை சம்பந்தப்பட்ட கோளாறுகள், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள், கழுத்து சம்பந்தப்பட்ட கோளாறுகள், என்று  தலையிலிருந்து கழுத்து வரை உள்ள உறுப்புகள் விஷயத்தில் கவனம் தேவை.

    கும்பம் ராசி

    அதேபோண்று உயரமான இடங்கள், தலைசுற்றல், மயக்கம் போன்ற விஷயத்தில் மிக மிக எச்சரிக்கை, பிபி வேரியேஷனை பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கும்ப ராசிக்காரர்களுக்கு இட மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், அதற்கு தயாராக கொள்ளக்கூடிய கும்பராசி நேயர்களுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய காலகட்டம்.

    அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு  மிக அற்புதமான காலகட்டத்தை பெற்றுத்தரும் காலம். சுபகாரியத் தடைகள் நிவர்த்தி, குடும்பத்தில் காணப்பட்ட  அன்னியோன்னியம் குறைபாடுகள் நிவர்த்தி,  கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்னியம் ஏற்படும்.  பிள்ளைகளுடைய விஷயத்தில் மிகப் பெரிய ஏற்றம் அனுகூலம் காணப்படும். படிப்பு, உத்தியோகம், வியாபாரம், போன்றவற்றில் உள்ள  பிரச்சனைகளிலிருந்து நிவர்த்தி ஏற்படும், மனதில் இருந்த பாரங்கள் குறையும்.

    கும்பம் ராசி

    கும்ப ராசி நேயர்களுக்கு உத்தியோகம், தொழில், வியாபாரம்,  என மார்ச் மாதத்திற்கு பிறகு பன்மடங்காக உயரும். கும்ப ராசிக்காரர்கள் விரோதிகளிடம் கோபதாபங்கள் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்கள் கூட அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகம் தொழில் நிமித்தமாக எடுக்கக்கூடிய முடிவுகள் பலராலும் பாராட்டப் படக்கூடிய அற்புதமான ஆண்டாக 2022 அமையும்.  நீண்ட நாட்களாக திருமணத் தடைகள், தாமதங்கள் தடைகள் எல்லாம் இந்த ஆண்டு உங்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு வெகு விரைவில் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad