Header Ads

  • சற்று முன்

    ’’பெண் போலீஸிடம் ரகளை செய்த குடிமகன்கள்’’..தட்டி தூக்கிய காவல் துறை..

    மதுபோதையில் ரகளை செய்த இளைஞ்சர்கள்

    திருப்பூரில் மது போதையில் பெண் தலைமை காவலர் இடம் தகராறு செய்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் பவானி. இவர் நகரப் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோல்டன் நகரைச் சேர்ந்த தேவா, சரண்ராஜ், சுரேஷ்,கலைவீரன்  ஆகிய 4  இளைஞர்களும் மதுபோதையில் வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பவானி இதனை தட்டி கேட்டுள்ளார். 

    இதையும் படியுங்கள் ; ’’அதிகரிக்கும் கொரோனா’’..தமிழகத்தில் ஊரடங்கு... புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

    இதனால் இளைஞர்கள் பெண் தலைமை காவலரானா பவானியிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு.  தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் 4 பேரையும் எச்சரித்து அனுப்ப முயன்றனர். ஆனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து செல்லாமல் அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ரகளையில் ஈடுபட்ட  4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad