Header Ads

  • சற்று முன்

    காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசருக்கு கொரோனா...

     

    காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்

     காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸின்  தாக்கமும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் தினம் தினம் ஊடகங்கள் வாயிலாக அறிந்துவருகிறோம் . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12, 843 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு அரசியல் தலைவர்கள்,திரைப்பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் இரையாகி வருகின்றனர்.  அந்தவகையில்  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்  திருநாவுக்கரசர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி, தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.




    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad