Header Ads

  • சற்று முன்

    ’’அதிகரிக்கும் கொரோனா’’..தமிழகத்தில் ஊரடங்கு... புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

    தமிழக முதல்வர்

    உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நோய்த் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், புதுடெல்லி, கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று  குறைந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், புதுடில்லி,கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் வேகமாக பரவி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து 27.12.2022 அன்றைய நாளில் 605 ஆக இருந்தது.  பொது இடங்களில் நோய்த்தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா  நோய்த்தொற்று அதிகரித்து 03.01.2022 அன்று 1728 ஆக உள்ளது. 

    கொரோனா வைரஸ்

    இந்நிலையில் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில்04.01.2022 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. குரானா மேலாண்மை குழுவின் தலைவர் திரு.ஆர். பூர்ணலிங்கம், இ.ஆ.ப. ( ஓய்வு  ) மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    தமிழ்நாட்டில் கோரணா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையிலும். பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

    ஞாயிறு ஊரடங்கு

     மாநிலம் முழுவதும்  06.01.2022 முதல்  வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல் படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும் இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்

    மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள், மாநிலத்துக்கு இடையேயான பொது தனியார் பேருந்து சேவைகள்,  பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல், ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி அளித்திருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள், மற்றும் எரிபொருள் வாகனங்கள், இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.


    இரவு நேர ஊரடங்கு

    உற்பத்தி தொழிற்சாலைகள் ,தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

    வரும் 09.01.2022  ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து, மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள், போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். 

    பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது. 09.01.2022 அன்று முழு ஊரடங்கின்போது  உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. 

    09.01.2022 மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை விமானம் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் அவ்வாறு பயணிக்கும்போது பயணச்சீட்டை வைத்துக் கொள்ள வேண்டும்


    இரவு நேர ஊரடங்கு


    இதர கட்டுப்பாடுகள்;  

    1. மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டு பள்ளிகள் ,நர்சரி பள்ளிகள், செயல்பட அனுமதி இல்லை. 

    2. அனைத்து பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.  

    3. பொதுத் தேர்வுக்கு மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். 

    4. அரசு தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.  

    5. பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. 

    6. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. 

    7. பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

    8.மெட்ரோ ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

    9. அனைத்து அரசு மற்றும் தனியார் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. 

    10. அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை, பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. 

    11. அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். 

    12. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

    13. சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.


    ஞாயிறு முழு நேர ஊரடங்கு தமிழகத்தில்

    14. மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    15. தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

    16. கடைகள் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவை துறைகள், போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.

    17. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்கள்09.01.2022 அன்று கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    18. ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும் போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்துக்கொள்ளவேண்டும்.

    19. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகளை ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும். உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், மற்றும் உறைவிடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

    20. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் இருப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50  நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். 

    21. துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

    22. கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உட்ன் செயல்பாட அனுமதிக்கப்படும்.

    23. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள்  செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கையில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

    24. திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். 

    25. உள்விளையாட்டு அரங்கில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும். 

    26. அழகு நிலையங்கள் சலூன்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad