Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் மீண்டும் அமலானது ஊரடங்கு..ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு..

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்கிறான் பரவல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்து  புதியதாக 2,731 பேருக்கு தோற்று உறுதியானது. சென்னையில் நேற்று முன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 1489 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்கிறான் பரவல்  அதிகரித்து வருவதை  குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். 

    தமிழகத்தில் முழு ஊரடங்கு

    இதையும் படியுங்கள் ; ’’நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ராஜேந்திர பாலாஜி கைது’’.. கர்நாடகாவில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸ்.

    இந்த ஆலோசனையில் தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு  அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரவு நேர உரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும். இந்தஇரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை  5 மணி வரை  அமலில் இருக்கும் என  தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad