Header Ads

  • சற்று முன்

    தேர்தல் அறிவிப்பு - "தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்"

     

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு   புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இயக்குநர் சங்கத்தின் 101-வது பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆகையால், தலைவர் பதவி - 1,  துணைத் தலைவர்கள் - 2, பொதுச் செயலாளர் - 1,  இணைச் செயலாளர்கள் - 4,  பொருளாளர் - 1, செயற்குழு உறுப்பினர்கள் - 12 , ஆகிய  அணைத்து நிர்வாகக் கமிட்டி குழுவுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

     தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிக்குப் போட்டியிடும் நபர்கள் வைப்புத் தொகையாக 3,000 ரூபாயும், நன்கொடையாக 10,000 ரூபாயும் தர வேண்டும் எனவும், துணைத் தலைவர், இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 3,000 ரூபாயையும் சங்கத்திற்கு அளிக்க வேண்டும் எனவும், 

    மற்றும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்பத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 2,000 ரூபாயையும் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிட்டி குழுவு தெரிவித்துள்ளது.

     மேலும், தேர்தல் முடிவில் பதிவான மொத்த வாக்குகளில் 3-ல் 1 பங்கையாவது பெறும் உறுப்பினர்களுக்கு மட்டுமே வைப்புத் தொகைத் திருப்பித் தரப்படும் என தேர்தல் நிர்வாகக் கமிட்டி குழுவு தெரிவித்துள்ளது.

    இந்தத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் சங்க அலுவலகத்தில் தரப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் , ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்.   

    விண்ணப்பங்கள் பரிசீலனை – ஜனவரி 10,  விண்ணப்பங்களை திரும்பப் பெற கடைசி தேதி – ஜனவரி 11,   இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 12-ம் தேதியன்று வெளியிடப்படும்.

    தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை  ஜனவரி 23 -ம் தேதியன்று  காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை,  வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெரும் என்று  தேர்தல் நிர்வாகக் கமிட்டி குழுவு அறிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad