Header Ads

  • சற்று முன்

    +2 மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழில் பயின்றவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.. - தமிழக அரசு அறிவிப்பு...

     

    Courtacy Image


    தமிழ் வழியில் பாடம் கற்று தேர்வெழுதும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக  அரசு தேர்வுகள் துறை  அறிவித்துள்ளது  

    தமிழகத்தில்  12 மற்றும் 10ம் வகுப்பு  மாணவர்கள்  பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.  அப்படி 2021 - 22 கல்வியாண்டில்  12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து நாளை முதல் (05.01.22) வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவுறுத்தியுள்ளார். . 

    DGE



    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,   தமிழை பயிற்று மொழியாக கொண்டு,தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண் பார்வைத் திறனற்றோர், வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாத   மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும்  தேர்வுக்கட்டணத்தில்  இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிக்கவும்: சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து.. நல்வாய்ப்பாக தப்பித்த குடும்பம்...

     அரசு மற்றும் அரசு உதவிப்பெறும்  பள்ளிகளில் பயிலும் MBC, SC,ST,SS,SCA  பிரிவு மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிற மொழிகளில் பயில்பவர்களாக இருந்தாலுல் அவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..  இதேபோல் BC, BCM பிரிவு மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம்  ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad