Header Ads

  • சற்று முன்

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பலி என்னிக்கை 4 ஆக உயர்வு.

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பலி என்னிக்கை 4 ஆக உயர்வு.

    சிவகாசி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த  பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  விபத்தின் போது 30 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள்  பணியில் இருந்துள்ளனர். 

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  எஞ்சியவர்களை  மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிவகாசி  ஆலையில் ஏற்பட்ட இந்த  வெடிவிபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    இதையும் படியுங்கள் ; ’’பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசுவை சுவற்றில் அடித்து கொலை’’- தலைமறைவான பெற்றோர் கைது

    வெடி   மருந்தை  செலுத்தும்போது உராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  பட்டாசு வெடித்து சிதறியதில் 6 அறைகள் தரைமட்டமாகின என தகவல் வெளியாகியுள்ளது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad