Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு.

    தமிழக முதல்வர் ஸ்டாலின்

    தமிழ் நாட்டில் கொரோனா  நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 07.01.2022 அன்று இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

     27.12.2021 இல் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும்  மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறை சட்டம். 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல்
     

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 10.01.2022 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு மருத்துவம்- மக்கள் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. உலக சுகாதார நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர்  சௌமியா சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு
     

    இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும். பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் நோயை கருத்தில் கொண்டும். பொதுமக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31.01.2021 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

    மேலும் படிக்க ; ’2- டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் பயண சீட்டு’’ - தெற்கு ரயில்வே அறிவிப்பு.  

    1. 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    2. 16.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.

    3. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 75% மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

    தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad