Header Ads

  • சற்று முன்

    ’’சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து’’....ஜேசிபி உதவியுடன் மீட்கபட்ட தொழிலாளி..

    சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கூலித் தொழிலாளியின் கால் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டதாள்  நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார்.

    திருமழிசை பகுதியிலிருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ள மதுக்கடைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கடைக்கு வெகு அருகே உள்ள பள்ளத்தை கவனிக்காமல் ஓட்டுநர் லாரியை இயக்கியுள்ளார். இதில் லாரியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  

    மேலும் படிக்க : பொங்கல் பரிசுத் தொகுப்பினை வீட்டிலிருந்து பை எடுத்து வந்து வாங்கிச்செல்லலாம்.. - தமிழக அரசு அறிவிப்பு..

    பின்புறத்தில் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற கூலித் தொழிலாளியின் வலது கால் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.  நீண்ட நேரம் போராடியும்  அவரது காலை வெளியே எடுக்க முடியாததால்.  ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியை லேசாக அசைத்து மார்த்தாண்டத்தை மீட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad