Header Ads

  • சற்று முன்

    ’’4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு’’ - வானிலை ஆய்வு மையம் தகவல்.

    4 மாவட்டங்களில் கன மழை

    டிசம்பர் 30-ஆம் தேதி மழை எதிர்பாராத விதமாக பெய்து வந்த நிலையில் இதனைத் தொடர்ந்து டிசம்பர் 30, 31, 1 ஆகிய மூன்று தேதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து. இன்று  நான்கு மாவட்டங்களுக்கும்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

    தென் தமிழக கடற்கரையை ஒட்டி அதாவது 3.6 கிலோ மீட்டர் அளவு உயரத்தில் நிலவக்கூடிய  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தேனி, தென்காசி, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை தெறிவித்துள்ளது.


    அது மட்டுமல்லாமல் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். நாளை தென் தமிழ் மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்பதையும். தமிழகத்தை  பொறுத்த மட்டும் வருகின்ற 6 தேதி வரை புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்த 48 மணி நேரத்திற்கு  வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெறிவித்துள்ளது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad