Header Ads

  • சற்று முன்

    ’’நேற்று ஒரே நாளில் ரூ.218 கோடிக்கு மது விற்பனை’’ - அரசுக்கு அடித்த ஜாக்பாட்..

    சென்னையில் மது விற்பனை

    தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கின் காரணமாக  நேற்று மதுகடைகளில் ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைகிரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்தது. மேலும் ஞாயிறு முழு ஊரடங்கின்போது   டாஸ்மாக் கடைகள் செயல்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு இன்றைக்கும் சேர்த்து மதுபானங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.. 

    மதுக்கடை

    தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளின் எண்ணிக்கை சுமார்  5,600 ஆகும் இதில்  தமிழகம் முழுவதுமாக பொதுவாக  ஒரு நாள் ஒன்றுக்கு ரூ.70 லிருந்து ரூ.80 கோடி வரை  மது விற்பனை நடைபெறும். வார இறுதிநாட்களில் ரு.100 கோடி வரை மதுபானம் விற்பனையாகும்.  ஆனால் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து,  நேற்று மட்டும் ரூ. 217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. 

    மதுக்கடை

    மேலும் படிக்க : தமிழக அரசு வழங்கிய பொங்கள் பரிசு தொகுப்பின் எடை குறைவு ... பொதுமக்கள் அதிர்ச்சி..

    இதில் அதிபட்சமாக  சென்னை மண்டலத்தில் மதுபானங்கள் ரூ.50.04  கோடிக்கும். மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.59  கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. இதேபோல் சேலம் மண்டலத்தில் ரூ.40.85 கோடிக்கும் , கோவை மண்டலத்தில் ரூ.41.28 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad