Header Ads

  • சற்று முன்

    வரதட்சணை வாங்காத மருமகன்.. அந்தப்பணத்தில் 5 ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்த தம்பதி..

    5 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்திய தம்பதி

    தன் மகள் திருமணத்துடன் சேர்த்து 5 இளம் பெண்களுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்துவைத்து மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தாழயி என்ற இடத்தைச் சேர்ந்தவர் சலீம் - ரூபினா தம்பதி. இவர்களுக்கு ரமீஷா என்ற மகள் உள்ளார். திருமண வயதை எட்டிய ரமீஷாவுக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்துவந்தனர். திருமணம் ஒழுகனதை அடுத்து ரமீஷாடன் மேலும் ஐந்து இளம் பெண்களுக்கும்  திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். 

    இதையடுத்து வயநாடு, எடச்சேரி, மலப்புரம் மற்றும் மேப்பை ஊரைச் சேர்ந்த ஏழை இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க ரமீஷாவின் தந்தை சலீம் முடிவு செய்தார். இதில் 2 பேர் இந்து மதத்தைச் சார்ந்த இளம்பெண்கள். இவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது மற்றவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணமும் நடைபெற்றது. 

    இதையும் படியுங்கள் ; கும்பம் ராசி நேயர்களே..2022-புத்தாண்டு பலன்கள்...

    மணப்பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான பட்டுப்புடவை அணிந்து கொண்டு திருமணத்தில் பங்கேற்றனர். தனது மகள் ரமீஷா உட்பட அனைவருக்கும் பத்து பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து சலீம் ரூபினா தம்பதிகள் வாழ்த்து தெறிவித்தனர். சலீம்  தன் மகளுக்கு வரதட்சனை கேட்காத மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதும், வரதட்சனை தொகையில் மகள் உட்படஏழை இளம் பெண்களுக்கு திருமணம் செய்து  வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad